ஜவான் – நோ சொன்ன விஜய் – பிரபல நடிகருக்கு வாய்ப்பு

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் தற்போது ‘லியோ’ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

1835752 26

இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இயக்குனர் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தற்போது அல்லு அர்ஜுனிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#Cinema

Exit mobile version