24 6639025b82d00
சினிமாபொழுதுபோக்கு

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Share

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஜான்வி கபூர் தற்போது தெலுங்கிலும் அறிமுகம் ஆகி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தமிழுக்கு எப்போது வருகிறார் என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போதைக்கு நேரடி தமிழ் படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து லேடி சூப்பர்ஸ்டாராக இந்திய சினிமாவில் வலம்வந்தவர். அவர் இடத்தை ஜான்வி பிடிக்க முடியுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஜான்வி கபூர் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். அவர் பிறந்தநாள் அன்று வருடம்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தனக்கு திருமணம் திருப்பதியில் தான் நடைபெறும் என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் காஞ்சிபுரம் தங்க ஜரி பட்டுப்புடவை அணிந்து கொண்டு தான் திருமணம் செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகைகள் பலரும் தங்கள் திருமணத்தை பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்தும் சூழலில், ஜான்வி கபூர் ஆன்மீக தலத்தில் திருமணம் நடத்த முடிவெடுத்து இருப்பதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Share
தொடர்புடையது
4 8
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் 9 சீசனிற்காக விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியமா?

விஜய் டிவி, இதில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளில் மிகவும் பிரம்மாண்டமாக...

3 8
சினிமாபொழுதுபோக்கு

தாலி விஷயத்தில் ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா எடுத்த அதிரடி முடிவு… பிரபலம் பகிர்ந்த தகவல்

ரோபோ ஷங்கர், தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக பேசப்படும் ஒரு நடிகர். ஆரம்பத்தில் இருந்து...

2 8
சினிமாபொழுதுபோக்கு

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா

நடிகை ராஷ்மிகா மற்றும் அவரது காதலர் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து...

1 8
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் 9 சீசனில் வெற்றிப்பெற்ற போட்டியாளருக்கு கிடைக்கும் பரிசுத் தொகை… எவ்வளவு தெரியுமா?

அட பொழுதே போக மாட்டாது பா, போர் அடிக்குது என கூறும் அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு...