முகத்தில் எண்ணெய் வழியுதா? அதனை போக்க இதோ சில டிப்ஸ்!

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது.

எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் குளிர் காலத்தை விட கோடைக்காலத்தில் தான் அதிகளவு பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

கடலை மாவு, பச்சை பயறு மாவுடன் பன்னீர் கலந்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் எண்ணெய் சருமம் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும்.

பன்னீர், சந்தனத்தூள் மற்றும் முல்தானிமெட்டி ஆகியவற்றை சம அளவு பசை போல் குழைத்து முகத்தில் தடவவும்.

முல்தானி மெட்டி முகத்தில் உள்ள அழுக்கை போக்குவதோடு அதிகப்படியான எண்ணெய் தன்மையை அகற்றிவிடும். வாரம் இருமுறை இந்த பேஸ் பேக்கை பயன் படுத்தி வரலாம்.

தயிரை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். எண்ணெய்ப்பசை தன்மை நீங்குவதுடன் சோர்வையும் போக்கி புத்துணர்ச்சியை தரும்.

Exit mobile version