இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில், ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ஜவான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என கிட்டத்தட்ட 5 மொழிகளில் இப்படம் அடுத்த வருடம் ஜூன் 2-ம் திகதி வெளியாக உள்ளது.
அனிருத் இசையில், நடிகைகள் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ஜவான் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்த வாரங்களில் இப்படத்துக்கான படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் ராணா ஏற்று நடிக்க இருந்த கதாபாத்திரத்துக்கு, விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆங்கில ஊடகமொன்றுக்கு இதுதொடர்பாக பேட்டியளித்த படக்குழுவை சேர்ந்த ஒருவர், “விஜய் சேதுபதி, இந்திய அளவில் முக்கியமான நடிகராகி இருக்கிறார்.
பான்-இந்தியா நடிகராக உயர்ந்துவரும் அவர், பல படங்களில் நடித்து வருவதால், அவருடைய கால்ஷீட் திகதிகள் தற்போது கிடைக்காமல் உள்ள காரணத்தால் அவை சரியானபின், மும்பையிலுள்ள ஜவான் படப்பிடிப்பு தளத்தில் அவரும் இணைந்துக்கொள்வார். முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் இணைவதன் மூலம், விஜய் சேதுபதியின் மார்க்கெட் இன்னும் உயருமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#vijaysethupathi #sharukkhan #nayanthara #jawan