பொதுவாக இன்றைய சூழலில் பெண்களுக்கு காணப்படும் வேலைப்பழுவினால் அவர்களின் தலைமுடி அதிகம் உதிர்வதுடன், வரட்சிதன்மையுடையதாக காணப்படுகின்றது.
இதற்கு ஆன்லைன்கள் மூலம் போலியான எண்ணெய் வகைகளை பயன்படுத்தி மேலும் தலைமுடியை வீணாக்கி விடுகின்றனர்.
ஆனால் வீட்டிலேயே உள்ள பொருட்களை பயன்படுத்தி தலைமுடியின் வரட்சியை போக்கி பொலிவான தலைமுடியை பெறலாம். தொடர்ந்து தலைமுடி வளர்ச்சிக்கு தலை முழுவது எண்ணெய் வைத்து மயிர்கால் அடைப்புகளை உண்டாக்குவதற்கு, அந்த எண்ணெய் வகைகளுக்கு பதிலாக பின்வரும் பொருட்களை பயன்படுத்துங்கள்.
முட்டை
முட்டை தலைமுடிக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு, பாதிப்படைந்த முடியை சரிசெய்யும். அத்தோடு முட்டையில் புரோடீன் , பயோடின் அதிகம் உள்ளதால், ஸ்கால்ப்க்கும், தலைமுடிக்கு போதுமான அளவு ஊட்டமளிக்கும்.
முடி அதிகம் வறண்டு காணப்பட்டால், முட்டையை உடைத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து , தலையில் தடவி, 20-30 நிமிடம் உறவைத்து, சிகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
அவகொடா
அவகொடாவில் மோனாஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு , தலைமுடியின் வறட்சியை போக்குவதிலும் சிறந்தது.
அவகோடாவின் சதை பகுதியினை அரைத்து, அதை ஸ்கல்ப்பில் தடவி ஊற வைத்து அலசி வந்தால் தலைமுடி சீராகவும் வறட்சியின்றியும் வளரும்.
இதை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தலைமுடி உதிர்வதும் குறைவடைவதுடன், செழிப்பான கூந்தலையும் பெறலாம்.
Leave a comment