தளபதி 67′ படத்தில் இணைகிறாரா ‘ஆடை’ பட இயக்குனர்?

j 1

விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ஆகிய இரண்டு படங்களிலும் லோகேஷ் கனகராஜூக்கு திரைக்கதை எழுதுவதில் உறுதுணையாக இருந்தவர் ‘ஆடை’ பட இயக்குனர் ரத்னகுமார்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 67’படத்தில் பணி புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்கப்போகிறார்.

இந்த படத்தின் திரைக்கதையிலும் ரத்னகுமார் பணிபுரிய உள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#cinema #vijay #lokesh kanagaraj

Exit mobile version