சினிமாவில் இருந்து விலகுகிறாரா சமந்தா?

samantha ruth prabhu 1638673850918 1638673862425

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரது திரைப்படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சமந்தாவுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தன்பேரில், சமந்தா தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க நடிகை சமந்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் பேமலி மேன் 2 ஹிட்டுக்குப் பிறகு சமந்தாவுக்கு நிறைய வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது ஆனால் உடல்நலனில் அக்கறை காட்ட நீண்டநாள் ஓய்வு தேவைப்படுவதால் படக்குழுவினரை காத்திருக்கும்படி சமந்தா கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவுப்பு ஏதும் வெளியாகவில்லை.

#Cinema

 

Exit mobile version