நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆர்த்தியை அவர் பிரிவதாக அறிவித்த பிறகு தற்போது புது தோழி கெனிஷாவை தான் ரவி மோகன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உடன் அழைத்து செல்கிறார்.
மேலும் தனது தயாரிப்பு நிறுவன தொடக்க நிகழ்ச்சியிலும் ரவி மோகன் கெனிஷா பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார். அவர் மட்டும் இல்லை என்றால்.. என அவர் சொன்னது பெரிய அளவில் வைரல் ஆனது.
இந்நிலையில் கெனிஷாவின் சமூக வலைதள ஸ்டோரியை பார்த்த பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.
அதற்கு பதில் அளித்த கெனிஷா தான் கர்ப்பமாக இல்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.