நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் தான். “ஜெயிலர்”
இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலானது.
இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஜெயிலர் படத்தின் தலைப்பில் தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று தொடங்கி உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை மலையாளத்தில் வெளியிடும் பொழுது அதற்கு சில தலைப்பு சிக்கல் வரலாம் என தெரிகிறது.
இதனால் ரஜினியின் ஜெயிலர் படம் மலையாளத்தில் வேறு தலைப்பில் வெளியாகலாம் என்று பேசப்படுகின்றது.
#CinemaNews