வெந்து தணிந்தது காடு முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

vendhu thanindhathu kaadu 1663235352

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று வெளியாகி முதல் காட்சி முடிந்ததும் பாசிட்டிவ் விமர்சனங்கள் இணையதளங்களில் பரவியது.

ஒருசிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதால் இந்த படம் நேற்று முதல் நாளில் சுமார் 800 திரையரங்குகளில் 80 சதவீத பார்வையாளர்கள் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றைய முதல் நாளில் இந்த படம் 10 முதல் 12 கோடி ரூபாய் வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று விடுமுறை நாள் இல்லை என்பதால் முதல் நாளில் 7.40 கோடி ரூபாய் வசூலானதாக தகவல் வெளியாகி உள்ளது.

#Simbu

Exit mobile version