ஹன்சிகாவுக்கு திருமணமா? தீயாய் பரவும் தகவல்கள்!

866273 hansika motwani

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு, டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது.

இதையொட்டி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெறவிருக்கிறது.

ஹன்சிகா மோத்வானி திருமணம் முடிக்கப் போகும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குறித்த கூடுதல் விபரங்கள் இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

டிசம்பர் மாதம் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டாலும், எந்த நாளில் நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

 

#hansikamotwani

Exit mobile version