பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் அடுத்தாண்டு ஜூன் 2ஆம் திகதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஷாருக்கான் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் அதாவது தந்தை மகன் கேரக்டரில் நடித்து வருவதாகவும், மகன் கேரக்டருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி ஷாருக்கானின் தந்தை கேரக்டருக்கு மனைவியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது.
சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தின் வில்லனாக பாகுபலி படத்தில் தனது நடிப்பால் மிரட்டிய ராணா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews