இயக்குனர் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பிக் போட்டியின் விளம்பர படமொன்றை இயக்கி வருகிறார்.
இந்த விளம்பர படத்தின் ஒருசில காட்சிகளில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்துள்ளார்.
முதல்வர் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றதாகவும் அவர் நடித்த காட்சியை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் இந்த விளம்பர படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த விளம்பரப் படம் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#vigneshshivan #mkstalin

