ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ருத்ரன்’.
இந்த படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அட்டகாசமான செகண்டலுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதேவேளை, படத்தின் வெளியீட்டு திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தில்
ராகவா லாரன்ஸ், சரத்குமார் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கதிரேசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதேவேளை, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#CinemaNews