விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க, இயக்குநர் கோகுல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் பாகத்தில் விஜய் சேதுபதி ‘சுமார் மூஞ்சி குமார்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
இப்படத்தில் அவர் பேசிய “குமுதா ஹேப்பி அண்ணாச்சி” போன்ற வசனங்களும், அவரது பாடி லாங்குவேஜும் (Body Language) ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்தன. கோகுல் இப்படத்தை முழுக்க முழுக்கக் காமெடி ஜானரில் (Comedy Genre) கலகலப்பான படமாக இயக்கியிருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.
எனினும், இதில் முக்கியமாக விஜய் சேதுபதி இல்லை என்ற தகவல் அவரது ரசிகர்களுக்குப் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. அவருக்குப் பதிலாக, நடன மாஸ்டராகப் புகழ்பெற்று தற்போது நடிகராகவும் கலக்கி வரும் சாண்டி மாஸ்டர் இப்படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு ‘சுமார் மூஞ்சி குமார்’ பாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.