அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் தான் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜவான் படம் குறித்து அவர் பேசுகையில், ” அட்லியின் படங்களை அனைவரும் பார்த்திருப்பார்கள். இது போன்ற படங்கள் நான் இதுவரை செய்யாத ஒன்று. நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார்.
ஒரு நடிகனாக ஜவான் போன்ற படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படம் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#CinemaNews