டொக்சிக் படத்திற்காக யஷ் மற்றும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்ட பிரம்மாண்ட சம்பளம்!

nayanthara in

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் KGF பட புகழ் யஷ் நடிப்பில் படு பிரம்மாண்டமாக தயாராகும் படம் தான் டாக்ஸிக்.

சில தினங்களுக்கு முன்பு யஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டீஸர் வெளியானது, நல்ல வரவேற்பும் கிடைத்தது. விஜய்யின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய ரவி பஸ்ரூர் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா என பலர் நடிக்கின்றனர்.

ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் 5 நாயகிகள் என்பதும் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படத்தின் நாயகன் யஷ் மற்றும் நடிகை நயன்தாரா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வலம் வருகிறது. இந்த பிரம்மாண்ட படத்திற்காக யஷ் ரூ. 50 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

அதேபோல் செம வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா இப்படத்திற்காக ரூ. 12 முதல் ரூ. 18 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

Exit mobile version