ரவா லட்டு எளிய முறையில் செய்வது எப்படி?

பொதுவாக பலரது வீட்டில் விசேஷம் என்றால் ரவா லட்டு செய்வது வழக்கம்.

இதனை கடைகளில் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலே எளியமுறையில் செய்யலாம்.

எளியமுறையில் ரவா லட்டு எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

delicious rava laddu with coconut and dryfruits

தேவையான பொருட்கள்

செய்முறை

முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.

அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும்.

கைவிடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும் பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும்.

கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம். சுவையான ரவா லட்டு தயார்.

Exit mobile version