கொத்து தோசை

1733846 kothu dosa

கொத்து தோசை

தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 2 கரண்டி

முட்டை – ஒன்று

வெங்காயம் – ஒன்று

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

மிளகு – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

வெண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும். முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.

தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). அடித்து வைத்த முட்டையை தோசை மீது (வேகாத தோசை) ஊற்றவும். பின்னர் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும்.

கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பாதி வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும். கடைசியாக மிளகு –

சீரகப் பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சூப்பரான கொத்து தோசை ரெடி.

#LifeStyle

Exit mobile version