24 660e444eeef69
சினிமாபொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்.. டாப் 10 லிஸ்ட்

Share

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்.. டாப் 10 லிஸ்ட்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்யார் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்..

இதில் முதலிடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்காக ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவதாக நடிகர் அஜித் குமார் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ரூ. 163 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்த பட்டியலில் மூன்று இடம் கிடைத்துள்ளது. வேட்டையன், தலைவர் 171 என அடுத்தடுத்து எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் ரூ. 140 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

இதன்பின் ரூ. 120 கோடிக்கும் மேல் சம்பளத்துடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் உலகநாயகன் கமல் ஹாசன். இதை தொடர்ந்து சூர்யா – ரூ. 60 சம்பளத்துடன் ஐந்துவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயன் ரூ. 55 கோடி, தனுஷ் ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி, கார்த்தி – ரூ. 28 கோடி, சிம்பு – ரூ. 25 கோடி, விஷால் – ரூ. 25 கோடி.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...