பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வெளிமாநிலங்களின் புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் திரிஷா ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது, “பல பேர் இந்த படத்தை பார்ப்பதற்காக ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
வெளிமாநிலத்தவர்களும் நம் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
முதல் பான் இந்திய திரைப்படத்தை மணி சார் தான் ஆரம்பித்தார். அதனால் மணி சாரை அனைவருக்கும் தெரிகிறது.
அவர் நம்முடைய பெரிய அடையாளமாக இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானும் மணிசாரும் வரும் பொழுது தமிழ்நாட்டில் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்களோ அதுபோல் தான் வெளிமாநிலங்களிலும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
#Karthi #Ponniinselvan
Leave a comment