படையப்பாவை முந்தியதா கில்லி, முழு வசூல் விவரம்

24 6628a7a3d8184

படையப்பாவை முந்தியதா கில்லி, முழு வசூல் விவரம்

விஜய்யின் கில்லி திரைப்படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் பலரும் திரையரங்கில் கில்லி படத்தை தற்போது திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் படையப்பா வசூலை கில்லி படம் தாண்டி விட்டது என கூறி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அதே சமயம் ரஜினிகாந்த் ரசிகர்கள், படையப்பாவின் வசூலை கில்லி தொடவே இல்லை என கூறி வருகிறார்கள்.

இப்படி தொடர்ந்து இரு தரப்பினர்கள் இடையே சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களின் வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.

2004ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் அப்போது ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை தொடர்ந்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆகி ரூ. 14 கோடி இதுவரை வசூல் செய்து, மொத்தமாக ரூ. 59 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

ஆனால், 1999ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கில்லி படத்தை விட படையப்பா படத்தின் வசூல் தான் அதிகம் என தெளிவாக தெரிகிறது.

Exit mobile version