நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘LIK’ படத்தில் நடித்து முடித்துள்ள இவர், மேலும் இரண்டு தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது முதல் பட வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து அவர் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முதல் படம் ‘உப்பெனா’ (Uppena) கிடைத்தது குறித்து க்ரித்தி ஷெட்டி கூறியதாவது “நான் ஒரு விளம்பர ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். அது முடிந்ததும், என்னைக் கூட்டிச் செல்ல என் அப்பா வரச் சிறிது தாமதமானது. அப்போது, அருகில் ஒரு ஸ்டுடியோ இருப்பதைப் பார்த்து உள்ளே நுழைந்தேன்.
அப்போதுதான் அங்கே ஒரு படத்திற்கான ஆடிஷன் நடப்பதை அறிந்தேன். அவர்கள் என்னைப் பார்த்ததும், ‘உங்களுக்கு நடிக்க ஆர்வம் உள்ளதா?’ என்று கேட்டார்கள்.
நான் என் அம்மாவின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இரண்டு நாட்களுக்குப் பின் இயக்குநர் புச்சி பாபு சார் (Buchi Babu) எனக்குக் கால் செய்தார். இப்படித்தான் தெலுங்கில் எனது முதல் படமான ‘உப்பெனா’ வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.”
விளம்பர வாய்ப்பு தேடலின்போது எதிர்பாராத விதமாகக் கிடைத்த இந்தச் சினிமா வாய்ப்புதான், இன்று க்ரித்தி ஷெட்டியைப் பிரபலமான நடிகையாக மாற்றியுள்ளது