image 1000x630 6 1
பொழுதுபோக்குசினிமா

இதுதான் பெயர் மாத்துற லட்சணமா? அரோராவின் நடவடிக்கையால் தோழி ரியா வேதனை!

Share

‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி மிகவும் சீரழிந்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதில் போட்டியாளராக இருக்கும் அரோரா சின்க்ளேரின்செயல்பாடுகள் அவரது நெருங்கிய தோழியான, முன்னாள் போட்டியாளர் ரியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

அரோராவின் நடத்தை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன், அரோரா பலூன் அக்கா என்னும் பெயரில் பிரபலமடைந்துள்ளதால் இந்த வாய்ப்பின் மூலம் அவர்தான் பெயரை மாற்றச் சொன்னதாக ரியா முன்பு தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அரோராவின் செயல்பாடுகளால் நெட்டிசன்கள் ரியாவைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ரியா ஒரு வீடியோவில், “அவள் உள்ளே சென்றதும் தனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன் என்றாள். அவங்களோட ஆக்‌ஷன்ஸ் எனக்குப் பயங்கர ஏமாற்றமாக உள்ளது. அது எனக்குப் புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “என் தோழி பத்தி என்னால ஆன்லைன்ல கமெண்ட் அடிக்க முடியாது. அவ வந்தா நேர்லயே சொல்வேன். இது ஓவர், இதெல்லாம் சரி கிடையாதுன்னு பக்கத்துல இருந்தா சொல்லியிருப்பேன்” என்றும் ரியா பேசியுள்ளார்.

தோழி பற்றித் தப்பாகப் பேசமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே, அரோராவின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்ததற்காக, அரோராவின் ரசிகர்கள் தற்போது ரியாவை விமர்சித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 5
பொழுதுபோக்குசினிமா

இயக்குநர் அட்லீ: ரூ. 800 கோடி படத்திற்கு நடுவே ரூ. 150 கோடியில் பிரம்மாண்ட விளம்பரப் படம்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சிஷ்யனாக அறிமுகமாகி, ‘ராஜா ராணி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கி,...

image 1000x630 4
பொழுதுபோக்குசினிமா

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம்: இரண்டு வாரங்களில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல்

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின்...

5 16
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...

4 16
சினிமாபொழுதுபோக்கு

இசையமைப்பாளர் அனிருத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக...