வித்யாசாகர் இறந்து சில தினங்களே ஆன நிலையில் இன்றைய தினம் தனது கணவர் இல்லாத முதல் திருமண நாளை எதிர்கொண்டுள்ளார் மீனா.
கடந்த ஆண்டில் இதே நாளில் தனது கணவர் தன்னுடைய வாழ்க்கையில் வானவில் போன்றவர் என்று மீனா, இருவரின் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
தன் கணவரின் இறப்பிற்கு பின்னர் முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் மீனா அதில் ‘எனது அன்புக் கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் கவலையடைந்து இருக்கிறேன்.
இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிலையில் மீனாவிற்கு சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மகள் நைனிகாவை மனதில் வைத்து அவர் தன்னை தேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
#meena
1 Comment