சுயநினைவை இழந்த பிரபல பாடகி – மருத்துவமனையில் அனுமதி

jayasri

புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர்.

தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version