முதல் நாள் உலகளவில் Dude படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

1 17

லவ் டுடே மற்றும் டிராகன் என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் Dude.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சரத்குமார், நேஹா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த Dude திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாதி நன்றாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி சொதப்பல் என்றும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், முதல் நாள் இப்படம் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Dude முதல் நாள் உலகளவில் ரூ. 20+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version