நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். துபாயில் நடந்த 24H ரேஸில் அவரது டீம் கலந்துகொண்டது.
போட்டி தற்போது நடந்து முடிந்து இருக்கும் நிலையில் 991 பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3ம் இடம் பிடித்து இருக்கிறது.
அஜித் குமார் மேடையில் பரிசு வாங்கும்போது அவருக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
மேடையில் ஒரு கையில் கோப்பை மற்றும் இன்னொரு கையில் இந்திய தேசிய கோடியை வைத்து ரசிகர்களை நோக்கி காட்டினார் அஜித்.
மேலும் தனது மகன் ஆத்விக்கை மேடையில் ஏற்றி அவர் கையிலும் கோப்பையை கொடுத்து மக்களுக்கு காட்ட சொன்னார் அஜித்.