பொதுவாக முகத்தில் முடிகள் இருந்தால் அது பெண்களின் அழகைக் கெடுக்கும்.
பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் முடிகள் இருக்கின்றன மற்றும் சிலருக்கு திடீரென தாடைகளில் முடிகள் முளைத்து சங்கடத்தை ஏற்படுத்தும்.
இதற்காக நீங்கள் அழகு நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயற்கை வழிகளை பின்பற்றினாலே போதும்.
அந்தவகையில் இயற்கையாக முகத்தில் முடியின் வளர்ச்சியைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
- ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவது குறைந்து, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
- கஸ்தூரி மஞ்சள் இன்று பெரும்பாலான கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும். உடனடியாக முடி நீங்கி விடாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும்.
- மஞ்சள் பொடியை தண்ணீரில் ஊறவைத்து, அதிலிருந்து பேஸ்ட்டை உருவாக்கி, அதிக முடி இருக்கும் முக பகுதியில் தடவி, சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அது காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியைப் பயன்படுத்தி மெதுவாக முகத்தை துடையுங்கள்.
- சிறிதளவு கோதுமை மாவினை எடுத்து முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் ரப் செய்வதினால் மெது மெதுவாக முடி உதிர்தலை ஊக்குவித்து முடி வளர்ச்சியைத் தடுக்கலாம்.
- பப்பாளியில் இயற்கையாக முடியை அகற்றும் என்சைம்கள் உள்ளன. எனவே பப்பாளியைத் தவறாமல் உங்கள் சருமத்தில் முடி உள்ள இடத்தில் உபயோகிப்பதால் முடிகள் அகன்று விடும். ஆனால் இதற்கு நாட்கள் ஆனாலும் வெகு நாட்களுக்கு முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.
- 2 டீஸ்பூன் கடலை மாவுடன், கொஞ்சம் ரோஸ் வாட்டர், 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெய் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பயன்படுத்தி வாருங்கள். இந்த மாஸ்க் உங்களுடைய முகழகை பராமரிக்க உதவும்.
- வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, சர்க்கரையை சேர்த்து நன்றாக குழைத்து முடி இருக்கும் இடங்களில் ஸ்க்ரப் போல் தேய்க்கவும். சர்க்கரைக்கு மாற்றாக கல் உப்பை பொடித்தும் சேர்க்கலாம். ஆனால் சமயத்தில் வேகமாக ஸ்க்ரப் செய்யும் போது சருமத்தில் பாதிப்பை உண்டாக்கி விடவும் வாய்ப்புண்டு என்பதால் ஸ்க்ரப் செய்யும் போது சர்க்கரையை மட்டுமே பயன்படுத்துங்கள். 10 நிமிடங்களுக்கு ஒருமுறை அரைமணி நேர இடைவெளியில் மீண்டும் மீண்டும் தேய்த்து மேலும் அரைமணி நேரம் விட்டு காட்டனை பன்னீரில் நனைத்து முடியின் மீது வைத்து அழுத்தி துடைத்து எடுத்தால் முடிகள் நீங்கும்.
#Beauty Tips
Leave a comment