images 8
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

இளமையில் தோன்றும் நரை முடியை சரிசெய்யனுமா? இதோ சில குறிப்புகள்

Share

இன்றைய காலத்தில் சிறுவயதிலே பலருக்கு முடி நரைக்க தொடங்கிவிடுகின்றது.

இந்த வெள்ளை முடியை மறைப்பதற்கு பலர் ஹேர் டைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர ஆரம்பித்துவிடும்.

இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி எளிய முறையில் சரி செய்ய முடியும்.

அந்தவகையில் இளமையில் தோன்றும் நரை முடி சரி செய்ய உதவும் சில எளிய வழிகளை முறைகளை இங்கே பார்ப்போம்

  • கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
  • கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப் பொடி, இஞ்சி, தேன் ஆகியவற்றை தினமும் ஒவ்வொன்றாக உணவில் சேர்த்து வரலாம்.
  • மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இரவு நேரத்தில் முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரை முடி மறைந்து நன்கு கரு கருவென மாறிவிடும்.
  • நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
  • நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்க வைத்து, வாரத்திற்கு இருமுறை முடிகளில் தடவி வந்தால், நரைமுடிகள் மறைந்து விடும்.
  • அவுரிப் பொடி, மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வந்தால் நாளடைவில் தலை முடி நன்கு கருமை நிறமாக மாறி விடும். வாரத்தில் ஒருமுறை நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்றாக சிகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரைமுடி மறைந்து கருமையான தலை முடியை பெற முடியும்.

 

  • #Hairtips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...