மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் 3 நாட்களில் 8.40 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் திரைப்படம் நடிகர் மாதவனே நடித்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே , ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது இத்திரைப்படம் 3 நாட்களில் 8.40 கோடி ரூபாயை வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews