12 44
சினிமாபொழுதுபோக்கு

நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி இத்தனை சீரியல்களை இயக்கியுள்ளாரா?.. உங்களுக்கு தெரியுமா?

Share

பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் உன்னை சரணடைந்தேன் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் சமுத்திரக்கனி.

அப்படத்திற்கு பிறகு சசிகுமாரை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அப்பட வெற்றியை தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில் படங்கள் இயக்கினார், ஆனால் சரியாக போகவில்லை.

இதனால் இயக்கத்தில் இருந்து நடிகராக களமிறங்க சாட்டை, காப்பான், நம்ம வீட்டு பிள்ளை, சில்லுக்கருப்பட்டி, விநோதய சித்தம் என தொடர்ந்து நடிக்க தெலுங்கிலும் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் வெளியாகி இருந்தன.

வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக, இயக்குனராக இருக்கும் சமுத்திரக்கனி நிறைய சீரியல்களை இயக்கியுள்ளாராம்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவரே பேசியும் உள்ளார். அண்ணி, சகானா, செல்வி, அரசி, அலைபாயுதே, தேன்மொழி போன்ற சீரியல்களை இயக்கியுள்ளேன்.

அதேபோல் ரம்யா கிருஷ்ணனின் தங்க வேட்டை நிகழ்ச்சியை கூட இயக்கி இருந்தேன் என கூற இதெல்லாம் நீங்கள் இயக்கிய சீரியல்களா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...