Screenshot 7681
அழகுக் குறிப்புகள்சினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

தீபாவளி விற்பனையில் சக்கைபோடு போடும் ‘பொன்னியின் செல்வன்’ சேலை” என்ன விலை தெரியுமா?

Share

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் 500 முதல் 600 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தில் உள்ள கேரக்டருக்கு தகுந்தவாறு மிக பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்தது தான் என்றும் இதனால் மணிரத்னம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 20220913 154412

 

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர்களின் காஸ்ட்யூம்கள் மற்றும் நகைகள் மிகப் பெரிய அளவில் பெண்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது தீபாவளியை கலெக்சனாக ’பொன்னியின் செல்வன்’ சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேலையில் ’பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கேரக்டர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது என்பதும் ’பொன்னியின் செல்வன் என்ற டைட்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த சேலையை பெண்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் 2100 ரூபாய் முதல் பொன்னியின் செல்வன் புகைப்படங்கள் கொண்ட பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஜவுளிக்கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...