8 11
சினிமாபொழுதுபோக்கு

திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!

Share

விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி, முழு அரசியலில் ஈடுபட உள்ளார். முதன்முதலாக கட்சி சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டில் திமுக, பாஜக எதிரி என அறிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய் பணியாற்றி வரும் நிலையில், ஒரு பக்கம் தனது கடைசி படம் என தளபதி 69வது படமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் செய்யும் அரசியல் பற்றி நாளுக்கு நாள் விமர்சனங்களை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கடும் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். குறிப்பாக ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து நிவாரணம் வழங்கியது பேசுபொருளானது. அரசியலில் விஜய் WORK FROM HOME செய்து வருகிறார் என விமர்சிக்கப்பட்டது.

இதனிடையே விஜய், திரிஷா குறித்து கிசுகிசுக்களும் பரவியது. லியோ படத்தில் இருந்தே இருவருக்கும் நெருக்கம் அதிகரித்திருப்பதாகவும், தனி விமானத்தில் சென்றது, லிப்டில் போட்டோ என அடுத்தடுத்து கிசுகிசுக்கள் எழுந்தாலும், விஜய் தரப்பினர் நண்பர்கள்தான் என கூறி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, திமுகவில் அண்மையில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தற்போது விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், விஜய் மக்கள் பணியை இன்னும் ஆரம்பிக்கவில்லை, அவருடைய கட்சி திமுகவுக்கு எந்த போட்டியையும் கொடுக்க வாய்ப்பே இல்லை.

இதுவரை தனது படங்களில் தமிழ் நடிகைகளை விஜய் ஏன் நடிக்க வைக்கவில்லை என கேள்வி எழுப்பிய திவ்யா, பிரியா பவானி, திவ்யா துரைசாமி, வாணி போஜன் என தமிழ் நடிகைகள் இருக்கும் போது வடமாநில நடிகைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார். தமிழ் நடிகைகளில் திரிஷாவை தவிர வேறு யார் அண்ணா உங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...