கன்னடத் திரையுலகின் ‘ராகிங் ஸ்டார்’ யஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘டொக்சிக்’ (Toxic) படத்தின் அறிமுகக் காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
வெளியான காணொளியில், மயானத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு காரில், நடிகர் யஷ் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சிதான் தற்போது இணையவாசிகள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இயக்குனர் பெண்களை வெறும் “மோகப் பொருளாக” (Objectification) சித்தரிப்பதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கதைக்கு இத்தகைய காட்சிகள் அவசியமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
மற்றொரு தரப்பினர், இது ஒரு மேக்கிங் ஸ்டைல் என்றும், இயக்குனரின் கலை சுதந்திரம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விமர்சனங்கள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, படத்தின் இயக்குனர் கீது மோகன்தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
“பெண்களின் இன்பம் (Female pleasure), சம்மதம் (Consent) மற்றும் சமூகக் கட்டமைப்புகளைப் பெண்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள மக்கள் எடுக்கும் முயற்சிகளை நான் அமைதியாக வேடிக்கை பார்க்கிறேன்.”
இந்தத் துணிச்சலான பதில் மூலம், அந்தப் படத்தில் பெண்களின் கதாபாத்திரம் ஆழமானதாகவும், சுயவிருப்பம் சார்ந்ததாகவும் இருக்கும் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

