தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குச் சிறப்புத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை குறித்துப் பல வதந்திகள் பரவின. இருப்பினும், மருத்துவக் குழுவின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து, இயக்குனர் பாரதிராஜா நேற்று வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் (Discharge) செய்யப்பட்டு வீடு திரும்பினார். அவர் நலமுடன் வீடு திரும்பிய தகவல் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

