bhagyaraj
சினிமாபொழுதுபோக்கு

இயக்குனர் பாக்யராஜ் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கமா?

Share

புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகம் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்தின் சார்பில் கே.பாக்யராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பட்டது.

அதில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகம் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துகளை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருவதாகவும், இதனால் கே.பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்க உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி வருவதாக அந்த Show Case நோட்டீஸில் நடிகர் சங்கம் இருவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தது.

மேலும் ஏன் உங்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் சார்பாக பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், புதிதாக வந்த நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான தகவலை பரப்பி வந்த காரணத்திற்காக இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா இருவரையும் ஆறு மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Bhagyaraj

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
34 4
சினிமா

பல வருடங்களுக்கு பின் எனக்கு அது கிடைத்துள்ளது.. நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக...

37 2
சினிமா

கணவரை கலாய்த்த சந்தானம்.. நடிகை தேவயானி பேட்டிக்கு சந்தானம் சொன்ன அதிரடி பதில்

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ்,...

35 5
சினிமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளராக பணியை துவங்கியவர் சந்தோஷ் நாராயணன். அதன்பின்...

36 2
சினிமா

நான் நடிகை என்பது என் கணவருக்கு தெரியாது! மனம் திறந்து பேசிய அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின்...