குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் ‘ஏகே 64’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் ஊடகங்களைச் சந்தித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், படம் குறித்துப் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் பெப்ரவரி மாதம் முதல் தொடங்கவுள்ளன.
ஏகே 64 கண்டிப்பாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் ரசித்து பார்க்கும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் ரசிகர்களுக்குப் பல ஆச்சரியமான (Surprises) விஷயங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படம் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும், இதுவரை ‘ஏகே 64’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Announcement) தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வெளியாகவில்லை. இது அஜித் ரசிகர்களிடையே சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஆதிக் ரவிச்சந்திரனின் தொடர்ச்சியான உறுதிமொழிகள் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தை ஒரு வித்தியாசமான ரகளையான கதாபாத்திரத்தில் காட்டிய ஆதிக், இந்த முறை குடும்பங்கள் ரசிக்கும் வகையிலான ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் கதையைத் தயார் செய்திருப்பதாகத் தெரிகிறது.