பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்தாரா அமலாபால்!

Amala Paul Mani Ratnam Ponniyin Selvan 1662954205516 1662954217320 1662954217320

பொன்னியின் செல்வன் படத்தை நான் நிராகரித்தேன் என்று அமலாபால் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது, “சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார்.

நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன்.

பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது.

இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை. ஏனென்றால் சில விஷயங்கள் நியாயமானவை. சரியானது. அது கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பற்றியது என்று நான் நினைக்கிறேன்” என அமலாபால் பேசியுள்ளார்.

#Amalapaul

Exit mobile version