சமீபத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் பொலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில் தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், நான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் சிங் பொலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த புகைப்படத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப பொலீசார் முடிவு செய்துள்ளனர்.
#ranveersingh

