தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார்.
தி க்ரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.
இதில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இதையொட்டி படத்திற்கான புரொமோஷன் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தி க்ரே மேன் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாப்பாத்திரங்களை உள்ளடக்கிய ஃபோட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Dhanush #TheGrayMan