IMAGE 1649665720
சினிமாபொழுதுபோக்கு

புதிய சர்ச்சையில் சிக்கிய தனுஷ்! என்ன தெரியுமா?

Share

பிரபல நடிகரான தனுஷ் தற்போது புதிய சர்ச்சையில் ஒன்றில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷும் அனிருத்தும் கூட்டணி அமைத்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி என்ற பாடலை நடிகர் தனுஷே எழுதி பாடியுள்ளார்.

சமீபத்தில் இந்தப் பாடலின் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியாகி யூட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போது சர்ச்சையில் சிக்கியது இந்தப் பாடல்தான். ஏனெனில் தாய்கிழவி பாடல் வயதானவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் பாடல் எழுதி பாடி தவறான முன் உதாரணமாகியுள்ளார் என்றும் வயதானவர்களை அவமதிக்கும் வரிகளை பாடலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பால் முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தாய் கிழவி பாடலில் வயதானவர்களை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடலின் வரிகள் வேடிக்கையாக இருந்தாலும் மூத்தவர்களை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் வகையில் உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி தனுஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விவாகரத்து சம்பந்தமான சர்ச்சைகளில் சிக்கி கொண்டுள்ள தனுஷு ற்கு தற்போது இது புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...