சுவையான இறால் தொக்கு
இறால் தொக்கு சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையான சுவை நிறைந்த உணவாகும் . இதனை குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருள்கள்
இறால் – 500 கிராம்
இஞ்சி, பூண்டு – அரைத்தது – 1 தேக்கரண்டி
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 பிடி
பொரிகடலை – 1 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் 50 மில்லி லிற்றர்
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின் வெங்காயம், தக்காளி போன்றவற்றை பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்
பொரி கடலையை வறுத்து தூளாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அதன் பின் சோம்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போன்றவற்றை இட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டைப் போட்டு வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் சேர்த்து வதக்குங்கள்.
அதன் பின் இறாலைப் போட்டு வதக்கி அரைத்த மஸாலாவையும் போட்டு வதக்குங்கள்.
பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள்.
இப்பொழுது மிதமான தீயில் வைத்து இறால் நன்றாக வெந்ததும் இறக்கி பரிமாறுங்கள்.
இப்போது சுப்பர் சுவையான இறால் தொக்கு ரெடி.