ட்ரெண்டாகும் ‘வாரிசு’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்..

varisu

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் திகதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படம் 50 நாட்களை கடந்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் போஸ்டர்கள் வெளியிட்டு கொண்டாடினர் .

இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியின் வீடியோவை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

#cinema

Exit mobile version