ஓராண்டுக்குப் பிறகு மகளின் முகத்தை வெளிப்படுத்திய தீபிகா – ரன்வீர் ஜோடி

MixCollage 22 Oct 2025 09 19 AM 8391

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, தீபிகா படுகோனே கடந்த ஆண்டு கர்ப்பமானார். அவர்களுக்குச் சரியாக செப்டம்பர் 9 ஆம் திகதி அன்று பெண் குழந்தை பிறந்தது.

தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த அந்தக் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) எனப் பெயரிட்டனர்.

இந்நிலையில், குழந்தை பிறந்து ஓராண்டுக்குப் பிறகு, தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்குத் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களைத் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஜோடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Exit mobile version