ராஜமவுலியுடன் இணைகிறார் தீபிகா

1779021 1

தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் ராஜமவுலி. இவர் ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார்.

மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

#cinema

Exit mobile version