தினம் ஒரு அவகோடா – அளவில்லா நன்மைகள்

வெண்ணெய்ப் பழம் என அழைக்கப்படும் அவகோடா பெயருக்கு ஏற்றாற் போல் இந்தப் பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணெய் போன்று வழுவழுப்பாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் அவகோடாவும் ஒன்று.

இதில் 25 இற்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து எம்மைக் காக்கின்றன.

இதில் நிறைந்துள்ள மருத்துவ மகிமைகளை பார்ப்போம்.

செரிமாணத்துக்கு
அவகோடாவில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானமடையச் செய்து நச்சுப் பொருட்களை கழிவுகளாக வெளியேற்றுகின்றன.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு தொடர்பானவற்றையும் இதிலுள்ள நார்ச்சத்து சரிசெய்கின்றது.
எமது அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவீதத்தை இந்தப் பழம் பூர்த்தி செய்கின்றது.

ddd 2
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம் இந்தப் பழத்தில் ஏனைய பழங்களை விட அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

இந்த போலிக் அமிலம் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரி செய்ய இன்றியமைதவையாகும்.
மேலும் இந்தப் பழத்திலுள்ள விற்றமின் கே குருதி உறைதலுக்கு துணைபுரிந்து தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பை அளிக்கின்றது.

கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற காலை மயக்கம் மற்றும் வாந்தி ஆகியவற்றை இந்தப் பழத்திலுள்ள பி6 கட்டுப்படுத்துகின்றது.

தினமும் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டு வர சருமம் பளபளப்பாவதுடன் என்றும் இளமைக்கும் வழிவகுக்கின்றது.
#Beauty

Exit mobile version