தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் 100 கோடி ரூபா வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில், அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ’டான்’ திரைப்படமும் ரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், 100 கோடி ரூபா வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் டான். படத்துக்கு இசையமைத்திருந்தார் அனிருத்.
படத்தில், எஸ்.ஜே. சூர்யா, சூரி,சமுத்திரக்கனி, பாலசரவணன், குக் வித் கோமாளி சிவாங்கி, ஆர்.ஜே. விஜய் என பல நடிகர் நடித்திருந்தனர்.
படம் வெளியான நாள் முத்த, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் 12 நாட்களில் ’டான்’ திரைப்படம் 100 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#CinemaNews