சூப்பர் அப்டேட் கொடுத்த தமன்! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

FV3ZQ1CacAAT61E

இளைய தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்றும் மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைத்தளத்தில் வாரிசு படத்தில் கம்போசிங் பணியைத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இயக்குனர் வம்சி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த படத்தில் விவேக் பாடல் எழுதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#cinema #Vijay #Varisu #Thaman

Exit mobile version