குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?
தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும்.
அப்படி ஆரம்பத்தில் இருந்து கடின உழைப்பை போட்டு இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் நிகழ்ச்சியிலும் இவரது சமையல் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலத்திலும் வெற்றிக்கண்டு வருகிறார். இளம் தொழிலதிபராக வலம் வரும் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.
சினிமாவில் நடிக்க விரும்பியவருக்கு நடிப்பு கைகொடுக்கவில்லை, ஆனால் சமையல் தொழில் அவரை மிகவும் பிரபலப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி மற்றும் குழந்தைகளின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments are closed.